உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்

நவாஸ்கனி எம்.பி., மீது நடவடிக்கைஹிந்து பாரத முன்னணி வலியுறுத்தல்

ராமநாதபுரம்: மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலும் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ஹிந்து பாரத முன்னணி மாநிலச் செயலாளர் ஹரிதாஸ்சர்மா வலியுறுத்தினார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.ஹிந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.மதக்கலவரத்தை ஏற்படுத்த முயலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி