உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சக்திவேல், காளீஸ் முன்னிலை வகித்தனர். ராமமூர்த்தி கூறியதாவது: ராமநாதபுரம் நகர் முகவை ஊருணி கரையில் ராஜகாளியம்மன் கோயில் உள்ளது. சமீபத்தில் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் மக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தினர் கோயிலை இடிக்க முயற்சிக்கின்றனர். கோயிலை இடிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர் செயலாளர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை