ஹூப்ளி, ராமேஸ்வரம் ரயிலை பரமக்குடியில் நிறுத்த கோரிக்கை
பரமக்குடி: ஹூப்ளி ராமேஸ்வரம் ரயிலை பரமக்குடி ஸ்டேஷனில் நிறுத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் பிரசன்னா ஆய்வு செய்தார். அப்போது ரயில் பயணிகள் சங்க தலைவர் புரோஸ்கான், இணைச் செயலாளர் ரகுகுல ராகேஷ், பொருளாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இதன்படி ஹூப்ளி, ராமேஸ்வரம் ரயில் பரமக்குடி ஸ்டேஷனில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். தொடர்ந்து ராமேஸ்வரம் மார்க்கத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. மேலும் வரும் நாட்களில் பரமக்குடியை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தம் செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் தெரிவித்ததாக கூறினர். ––