நுாறுநாள் வேலை தர கோரிக்கை
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கோவிந்தகுளம் ஊராட்சியைச் சேர்ந்த கீழ்மருதங்குளம் கிராம மக்கள் நுாறுநாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.கீழ்மருதங்குளம் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு வாரம் வேலைபார்த்தோம் அதற்குரிய பணமும் இதுவரை வழங்கவில்லை. பக்கத்து ஊரில் உள்ளவர்களுக்கு வேலை தருகின்றனர்.எங்களுக்கு ஊருணி வெட்டும் வேலை தரமறுக்கின்றனர். எனவே ஒருவாரம் சம்பளம் பாக்கி மற்றும் தொடர்ந்து நுாறுநாள் வேலை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.