உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனைவி கொலை கணவன் கைது

மனைவி கொலை கணவன் கைது

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வடக்கு ஊரணங்குடியில் ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.வடக்கு ஊரணங்குடியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சங்கர் 38. இவருக்கும் கூடலுாரை சேர்ந்த நாகநாதன் மகள் பாகம்பிரியாளுக்கும் 35, கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த பாகம்பிரியாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு இருந்ததால் உடல் நலனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் குழந்தையை அபார்ஷன் செய்தனர். இந்நிலையில் மனைவியை தனது ஆசைக்கு இணங்குமாறு கணவர் சங்கர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். நேற்று அதிகாலை இத்தகராறில் மனைவியை சங்கர் அடித்துக் கொலை செய்தார்.அதன்பின் பாகம்பிரியாள் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடினார். இதையறிந்த உறவினர்கள், திருப்பாலைக்குடி போலீசுக்கு தெரிவித்தனர். விசாரணையில் மனைவியை அடித்துக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால் சங்கரை கைது செய்தனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி