உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாடானை: திருவாடானை, தொண்டியில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இரு நாட்களாக திருவாடானை, தொண்டி பகுதியில் மழை பெய்கிறது.அவ்வப்போது பலத்த மழையும், மிதமான மழையும் பெய்கிறது. இதனால் நிலங்களில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வளர்ச்சி நிலையிலுள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.கடைவீதிகளில் கூட்டம் குறைவாக உள்ளது. பெரும்பாலன மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். டூவீலர்களில் செல்பவர்கள் மழைக்கோட்டு அணிந்து செல்கின்றனர். ரோட்டோர கடைகளில் வியாபாரம் முடங்கியுள்ளது. வெளியூர் வேலைக்கு செல்பவர்கள் காலை நேரத்தில் பெய்யும் மழையால் சிரமம் அடைந்துள்ளனர். சோலியக்குடி, நம்புதாளை கடலோர கிராமங்களில் மீனவப் பெண்கள் கருவாடுகளை காய வைக்க முடியாமல் தவிப்பில் உள்ளனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நனைந்தபடி செல்கின்றனர். முதியவர்கள் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி