உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெண்களுக்கான வாழ்வாதார தொழிற் பயிற்சி துவக்க விழா

பெண்களுக்கான வாழ்வாதார தொழிற் பயிற்சி துவக்க விழா

திருப்புல்லாணி,: திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் கரூர் வைசியா வங்கியின் சமூக பங்களிப்பு நிதி மூலம் வாப்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து பெண்களுக்கான வாழ்வாதார தொழிற்பயிற்சி திட்டத்தின் துவக்க விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் டி.என்.எஸ்.ஆர்.எல்.எம் திட்ட இயக்குநர் அருண்மொழி தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திரிபுரசுந்தரி முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி பி.டி.ஓ., கோட்டை இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், சமூக நலத்துறையின் ஓ.எஸ்.சி., அலுவலர் விஜிதா, கரூர் வைஸ்யா வங்கியின் மதுரை மண்டல மேலாளர் சதீஷ் பாபு, வங்கி சமூக பங்களிப்பு திட்ட மேலாளர் வெங்கடேசன், வங்கி கிளை மேலாளர் சதீஷ்குமார், திட்டட மேலாளர் காளிமுத்து, வாப்ஸ் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அருள், அணி தலைவர் சரவணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் மற்றும் பெண்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ