உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வரத்து குறைவால் நிலக்கடலைவிலை அதிகரிப்பு: கிலோ ரூ.60

வரத்து குறைவால் நிலக்கடலைவிலை அதிகரிப்பு: கிலோ ரூ.60

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நிலக்கடலை விளைச்சல் குறைந்தும், வெளியூர்களில் இருந்தும் வரத்து இல்லாததால் விலை உயர்ந்து கிலோ ரூ.60 வரை விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நயினார்கோவில், கமுதி, முதுகுளத்துார், சிக்கல் உள்ளிட்ட இடங்களில் நெல், மிளகாய், பருத்திக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இவ்வாண்டு போதிய மழை இல்லை. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் நிலக்கடலை விளைச்ச குறைந்துள்ளது. மேலும் சந்தைக்கு வெளியூர்களில் இருந்து வரத்தின்றி  கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50க்கு விற்ற நிலக்கடலை தற்போது கிலோ ரூ.60 வரையும், ஒரு படி ரூ.50க்கும் அதன் ரகம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஏற்ப விற்கப்படுகிறது என வியபாரிகள் கூறினர்.––


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ