உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புளி விளைச்சல் அதிகரிப்பு

புளி விளைச்சல் அதிகரிப்பு

சாயல்குடி: கடலாடி, சாயல்குடி, சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இந்நிலையில் புளி விளைச்சல் அதிகமாக இருப்பதால் அவற்றின் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.புளி வியாபாரிகள் கூறியதாவது: நடப்பாண்டில் புளி விளைச்சல் அதிகம் இருந்ததால் கடந்த ஆண்டு கிலோ புளி ரூ.130 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.100க்கு விற்பனை செய்கிறோம். உள்ளூரிலேயே விளையக்கூடிய நாட்டுப் புளியை அவற்றில் உள்ள கொட்டையை நீக்கி விற்பனை செய்யப்படுகிறது. சுவையான நாட்டு புளியாக இருப்பதால் ஏராளமானோர் வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ