உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டில் திரியும் கால்நடைகளால்  வாகன விபத்துகள் அதிகரிப்பு

ரோட்டில் திரியும் கால்நடைகளால்  வாகன விபத்துகள் அதிகரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம்--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படு கிறது. ராமநாதபுரம் சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான், வாலாந்தரவை பகுதிகளில் உள்ள கால் நடைகள் பெரும்பாலான நேரங்களில் ரோட்டின் ஓரம் சுற்றித்திரிகின்றன. மதியம், மாலை நேரங்களில் அவை ரோட்டிலேயே தங்கிவிடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். மாலை நேரங்களில் கால்நடைகள் ரோட்டை கடக்கும் போது அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப் படுத்த வேண்டும். தொடர்ந்து ரோட்டில் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மக்கள் வலி யுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை