| ADDED : டிச 24, 2025 05:31 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் நடை பெறவிருக்கும் (2026 மார்ச், ஏப்.,) பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் இணையதளம் வழியாக 2026 ஜன.,7 வரை விண்ணப் பிக்கலாம். மாவட்டத்தில் திருவாடானை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல் நிலைப் பள்ளி, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல் நிலைப் பள்ளி, பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல் நிலைப் பள்ளி, கே.ஜே.இ.எம். மேல் நிலைப் பள்ளி, ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் நேரில் சென்று www.dge.tn.gov.inஇணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்விற்கான பயிற்சிக்கு ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தில் 2026 ஜன.,7 வரை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான முழு விவரங்களை www.dge.tn.gov.inஎன்ற இணைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் பாத்திமா தெரிவித்துள்ளார்.