உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை துவங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கலையரசன், தாலுகா செயலாளர் சேதுராமன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை