உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி

ஹெலிகாப்டரில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில்இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து நீச்சல் பயிற்சி பெற்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள இந்திய கடற்படையின் பருந்து விமானப் படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் 8க்கும் மேற்பட்ட வீரர்கள் புறப்பட்டனர். ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் இருந்து புறப்பட்ட ரோந்து படகில் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து 1 கி.மீ., துாரத்தில் கடலில் குதித்து நீச்சல் பயிற்சி பெற்றனர்.ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் வீரர்கள் கடலில் இறங்கியும், மேலே ஏறியும் பயிற்சி பெற்றனர். இது கடற்படையில் புதிதாக சேர்ந்த வீரர்களுக்கு அளிக்கப்படும் வழக்கமான பயிற்சி தான் என இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி