உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்

சாயல்குடி பனை மரக்காட்டில் பதநீர் இறக்கும் பணி துவக்கம்

சாயல்குடி, : -சாயல்குடி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மாசி முதல் வாரத்தில் பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்க வசதியாக ஓலைகளை களைந்து பாரமரித்து வருகின்றனர்.சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பல லட்சம் பனை மரங்கள் உள்ளன. மேலச்செல்வனுார், கீழச்செல்வனுார், காவாகுளம், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், பூப்பாண்டியபுரம், பெரியகுளம், மாரியூர், ஒப்பிலான், கடுகுசந்தை, சாயல்குடி, உறைகிணறு, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் பனைமரத் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.பனை மரக்காடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பதநீர் இறக்கி அவற்றை கருப்பட்டியாக காய்ச்சுவதற்காக பனை ஓலையில் குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கி கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி உள்ளிட்ட மாதங்களே பதநீர் சீசன் காலம். பதநீர் இறக்கும் தொழிலாளிகள் கூறியதாவது: பதநீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஒரு லி., ரூ.80 முதல் 100 வரை விற்கப்படுகிறது. தற்போது பனை மரத்தின் பக்கவாட்டு ஓலைகளை வெட்டி பதநீர் இறக்க வசதியாக தயார் செய்து வருகிறோம்.கருப்பட்டி மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் இதன் மகத்துவம் அறிந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் ஏராளமானோர் ஆர்டரின் பேரில் வியாபாரிகளிடம் வாங்கிச் செல்கின்றனர். சாயல்குடி கருப்பட்டிக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி