உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்து பேசியதாவது:கல்லுாரி பருவத்தில் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள துறைகளில் நன்கு படித்து உயர் பணியிடத்திற்கு செல்ல வேண்டும். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.மேலும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி பல்வேறு சாதனை புரிந்து கல்லுாரிக்கு பெருமை சேர்க்க வேண்டும். அரசுத் தேர்வுகளில் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி பெற்று அரசு பணியில் சேர வேண்டும் என்றார்.முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்றனர். உடன் எஸ்.ஐ.,க்கள் சுரேஷ்குமார், வெங்கடேசன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ