சேதமடை நிழற்குடையை சீரமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை அளுந்திக்கோட்டை விலக்கு பகுதியில் அமைந்துள்ள சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, அளுந்திக்கோட்டை விலக்கு பகுதியில் பயணியர் நிழற்குடை உள்ளது. இதனால் அளுந்திக்கோட்டை, அண்ணாமலை நகர், மங்கலம், அத்தனுார் உள்ளிட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த நிழற்குடை கூரை சேதமடைந்து சிமென்ட் சிலாப்புகள் உதிர்கிறது. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.