உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பகலிலும் கொசுக்கடியால் அவதி மருந்து தெளிப்பதற்கு வலியுறுத்தல்

பகலிலும் கொசுக்கடியால் அவதி மருந்து தெளிப்பதற்கு வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் தேங்கும் பாதாள சாக்கடை நீர், அள்ளப்படாத குப்பையால் கொசுத்தொல்லை அதிகரித்து பகலிலும் கடிப்பதால் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசு மருந்து அடிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல இடங்களில் சரிவர பராமரிக்கப்படாமல் கழிவுநீர் ரோட்டில் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீருடன் கழிவுநீர் தேங்குகிறது. சில இடங்களில் குப்பை அள்ளப்படாமல் உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நகரில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. பகல் நேரத்திலும் கொசுக்கள் கடிக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, மலேரியா, டெங்கு நோய் பரவும் ஆபத்துள்ளது. எனவே நகராட்சி நிர் வாகம் நகரில் தேங்கும் கழிவுநீர், மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும். வார்டு வாரியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ