உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம்  மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம்  மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.நயினார்கோவில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்க மாநிலத்தலைவர் சார்லஸ், மாநிலப் பொது செயலாளர் ரவி, ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் மணிராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். --------அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகள் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணிக்கொடைரூ. 5 லட்சமும், பணி ஓய்வு மாதத்தில் பெறும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்டச் செயலாளர் ஜெயராமகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் விஜயன், தலைவர் பாலமுருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ