மேலும் செய்திகள்
சேதமடைந்த நிழற்குடை
09-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சவேரியார்பட்டினம் விலக்கில் இருந்த பயணியர் நிழற்குடை சிலஆண்டுகளுக்கு முன்பு வாகனம் மோதியதில்சேதமடைந்தது. அதன் பின் அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை.இந்த பஸ் நிறுத்தத்தில் சவேரியார்பட்டினம், புல்லமடை, வல்லமடை, ராமநாதமடை, ரெட்டையூரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் மழை, வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சவேரியார் பட்டினம் விலக்கில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
09-Oct-2024