உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை அமைக்க வலியுறுத்தல்

தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை அமைக்க வலியுறுத்தல்

தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் புனித நீராடும் வகையில் படித்துறை அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இவ்வழியே சென்றபோது இங்கு இளைப்பாறினார். தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது. தை மற்றும் ஆடி மாத அமாவாசை நாட்களில் வெளியூர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்கின்றனர். கடலில் புனித நீராடி விட்டு சுவாமியை வணங்குவது வழக்கம். கடற்கரையில் சேரும், சகதியுமாக இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பொதுமக்கள் கடலுக்குள் சென்று நீராடும் வகையில் படித்துறை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி