உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத்திருவிழா போட்டிகள்  

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கலைத்திருவிழா போட்டிகள்  

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது.சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நவ.12 முதல் நடந்து வருகிறது. துவக்க விழாவிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் சின்னராசு தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு துவக்கி வைத்தார்.மாவட்டக் கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சேதுராமு, ரவி, கனகராணி, உதவித்திட்ட அலுவலர் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரவீந்திரன், கர்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்கும் போட்டிகள் நவ.14 முதல் 18 வரை நடந்து வருகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ