உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை

பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை

சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளான ஐந்து ஏக்கர், உறை கிணறு, நரிப்பையூர், கடுகுச்சந்தை, பூப்பாண்டியபுரம், கூரான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனை மரங்களுக்கு மத்தியில் ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி நடக்கிறது.கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையால் நிலத்தில் ஈரப்பதம் நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி பனை மரக்காடுகளுக்கு நடுவே ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் கூறியதாவது: நிலங்களின் வரப்போரங்களில் பனை மரங்கள் மிகுதியாக உள்ளது.இந்நிலையில் பெரும்பாலான நிலங்களில் போதிய இடைவெளி விட்டு பனை மரங்கள் உள்ளன. டிராக்டரில் உழவு செய்து நிலக்கடலை விதைப்பு செய்துள்ளோம். தற்போது பெய்த மழையால் நிலக்கடலை செடிகள்நன்கு வளர்கிறது. களைக்கொத்து எனப்படும் சிறிய அளவிலான மண்வெட்டி மூலம் நிலக்கடலை செடிகளின் மேற்பகுதிகளில் மண் அணைக்கும் வேலையை செய்து வருகிறோம். கூலியாட்கள் காலை 7:00 முதல் மதியம்1:30 மணி வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர்.ரூ.300 கூலி வழங்கப்படுகிறது.பனை மரங்களுக்கு ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி செய்யும் போது இயற்கை உரங்களால் நிலக்கடலை செடியும் வளர்கிறது. பனை மரத்திற்கும் தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ