உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்

ராமநாதபுரத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்

ராமேஸ்வரம்:சர்வதேச யோகா தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், ரயில்வே, கடற்படையினர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் கமாண்டர் நரேந்திர சிங் தலைமையில் ஏராளமான வீரர்கள் யோகா பயிற்சி பெற்றனர். ராமேஸ்வரம் யோகா பயிற்சியாளர் களஞ்சியம், வீரர்களுக்கு பத்மாசனம், சிரசாசனம், மயிலாசனம் உள்ளிட்ட பல யோகா கலைகளை கற்றுக் கொடுத்தார். மேலும் மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் யோகா பயிற்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமேஸ்வரம் மங்கம்மா சத்திரத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.*பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிக் குழு தலைவர் அறிவு, நீதித்துறை நடுவர் ஐயப்பன் பங்கேற்றனர். சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோகா செய்யப்பட்டது. இதில் பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன், செயலாளர் யுவராஜ் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணி குழுவினர் செய்தனர்.*திருவாடானை நீதிமன்றத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நீதிபதி அன்டோனி ரிஷந்தேவ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் வேணுகோபால் கலந்து கொண்டு அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தார். வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், சட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.*சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சாயல்குடி, கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ., சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பா.ஜ., ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். யோகாவின் பயன் குறித்து யோகா மாஸ்டர் மணிகண்டன் விளக்கினார். பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன், வடக்கு ஒன்றிய தலைவர் முருகன், ஆன்மிக பிரிவு செயலாளர் கதிர்வேல், ஒன்றிய துணைத் தலைவர் முத்துராமலிங்கம் உட்பட ஏராளமான பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.*ராமநாதபுரம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் சர்வதேச யோகாவிழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துதுவக்கி வைத்தார்.நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்வள்ளிவிநாயகம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்களாகபதஞ்சலி யோகா பயிற்சி மைய யோகா நிபுணர் பத்மநாபன், ராமநாதபுரம் மாவட்ட யுவ பாரத் அலுவலர் சாமியேக்மேஷ்ரம்,ராமநாதபுரம் திட்ட மேலாளர் முருகேசன் பங்கேற்றனர். தாளாளர் செல்லதுரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளியின்தாளாளர் ராஜாத்தி அப்துல்லா வாழ்த்தினர். உடற்கல்வி இயக்குநர்கள்சவேரியார், எப்சிமேரி, ஒருங்கிணைத்தனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்சக்திவேல் நன்றி கூறினார். *கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரயில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. செஞ்சிலுவை சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் தவசிலிங்கம் யோகா குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுலைமான், சதாம் உசேன், முனிய சத்தியா, நுாலகர் பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் ஜேசுதுரை நன்றி கூறினார்.*ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகப்பகுதியில் உள்ள விவேகானந்தாவித்தியாலயா மெட்ரிக் பள்ளியில் யோகா தினம் நடந்தது.பள்ளி மாணவர்கள் தாளாளர் ருத்ராநந்த சுவாமிகள் தலைமையில்யோகா பயிற்சி மேற்கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை