மேலும் செய்திகள்
ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு
08-Sep-2025
ராமநாதபுரம்: ''தமிழகத்தில் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்,'' என, ராமநாதபுரத்தில் நடந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அதன் மாநில செயலாளர் கற்பகம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு செப்., 24 முதல் 27 வரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடக்க உள்ளது. நாடு முழுவதும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு நிகழும் அச்சுறுத்தல்களை தடுப்பது, பெண்ணுரிமையை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடக்கிறது. இன்றைக்கு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதனை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் ஜாதி ஆணவக் கொலைகளுக்கு உள்ளாகின்றனர். ஜாதி ஆணவக் கொலைகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். மாநில மாநாட்டில் பெண்கள் நலன் சார்ந்த தீர்மானம் முன்மொழியப்படும் என்றார்.
08-Sep-2025