உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சொல்லாதையும் செய்வதாக சொல்லும் முதல்வர் அரசு ஊழியருக்கு சொன்னதை செய்யவில்லையே ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் பேட்டி

சொல்லாதையும் செய்வதாக சொல்லும் முதல்வர் அரசு ஊழியருக்கு சொன்னதை செய்யவில்லையே ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் பேட்டி

ராமநாதபுரம்: ''சொல்லாதையும் செய்துள்ளோம் என கூறும் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு சொன்னதை செய்யவில்லையே. 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்,'' என, ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.ராமநாதபுரத்தில் நடந்த தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின் கூறியதாவது:தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 12 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தி.மு.க., அரசு தேர்தல் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்குப்பிறகு மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை தெரிவித்து அதற்கு குழுவும் அமைத்துள்ளது. இதுகாலம் கடத்தும் வேலையாகும். நிதி அமைச்சர் தென்னரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார். அதனை நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது. அப்படி செய்யவில்லை என்றால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வரும் சட்டசபை தேர்தலில் எதிரான நிலையை எடுப்பார்கள்.மத்திய அரசு தமிழக கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.2152 கோடியை வழங்கவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றால் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்கின்றனர். இது தமிழகத்தில் உள்ள 40 லட்சம் மாணவர்களின் கல்வியை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி