மேலும் செய்திகள்
இயற்கை வாசம் செல்லப்பிராணிகளுடன் நேசம்
07-Dec-2024
சாயல்குடி : சாயல்குடி நகர் பகுதிகளில் 27 வண்ணங்களில் கோலப்பொடி பாக்கெட்டுகள் விற்பனை ஜரூராக நடக்கிறது.கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களில் வீடுகளுக்கு முன்பு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு அலங்கார படுத்துவது வழக்கம். இதற்காக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, கருப்பு, நீலம், வெள்ளை உள்ளிட்ட 27 வகையான வண்ண வண்ண கலர் பொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது.சாயல்குடி கோலப்பொடி மொத்த வியாபாரி தங்கையா கூறியதாவது:சாயல்குடி நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் கார்த்திகை முதல் தை வரை உள்ள மூன்று மாதங்களில் வீடுகளுக்கு முன்பாக பல வண்ணங்களில் கோலமிடுவது வாடிக்கை. இதனால் 27 வண்ணங்களை உள்ளடக்கிய கோலப்பொடிகளை ஆர்வமுடன் பெண்கள் வாங்கிச் செல்கின்றனர். கோலப்பொடி பாக்கெட்டுகள் ரூ.10க்கு விற்பனை செய்கிறோம்.ஒவ்வொரு வண்ணக் கலவையையும் தனித்தனியாக பிரித்து வெள்ளை கோலப்பொடியில் சாயமேற்றப்பட்டு அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. தற்போது கலர் கோலப்பொடிக்கான சீசன் துவங்கி உள்ளதால் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
07-Dec-2024