தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி துவக்கம்
திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நேற்று துவங்கியுள்ளது. திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. மங்களக்குடி பிர்கா கணக்கு ஆய்வு செய்யபட்டது. மக்களிடமிருந்து 55 மனுக்கள் பெறபட்டன. தாசில்தார் ஆண்டி, சமூகநலத்திட்ட தாசில்தார் இந்திரஜித், மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, வி.ஏ.ஓ. சங்க மாவட்ட தலைவர் நம்புராஜேஸ் பங்கேற்றனர். நாளை புல்லுார், 23 ல் தொண்டி, 27 ல் திருவாடானை பிர்காக்கள் ஆய்வு செய்யப்படும்.ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் தலைமை வகித்தார். பட்டாமாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.பரமக்குடி: பரமக்குடி தாலுகாவை சேர்ந்த பார்த்திபனுார் பகுதியைச் சேர்ந்த 9 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமை வகித்து, கணக்குகளை தணிக்கை செய்ததுடன், மக்களிடம் இருந்து 33 மனுக்களை பெற்றார். தாசில்தார் வரதன், சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் ரெங்கராஜன், துணை தாசில்தார் வெங்கிட கிருஷ்ணன் பங்கேற்றனர்.கீழக்கரை: தாலுகா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அலுவலர் கோவிந்த ராஜுலு தலைமை வகித்தார்.தாசில்தார் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். வருவாய் அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர். பட்டா மாறுதல், வீட்டுமனை ஒப்படைப்பு, கணினி திருத்தம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைகள் குறித்து பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.