மேலும் செய்திகள்
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
01-Oct-2025
ராமநாதபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.2500 வரை விற்பனையானது. ராமநாதபுரம் அரண்மனை ரோட்டில் உள்ள மார்க்கெட், உழவர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டது. குறிப்பாக மல்லிகை, முல்லை பூக்களின் தேவை அதிகரித்ததால் விலை உச்சத்தை தொட்டது. மலர் மாலையும் குறைந்தது ரூ.150 முதல் விற்பனையானது. வியாபாரிகள் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மண்டபம், புதுக்கோட்டையில் இருந்து பெரும்பாலும் மல்லிலை பூ வரத்து இருக்கும். கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் தற்போது மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூ.500 க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது ரூ.2000 முதல் ரூ.2500 வரை விலை உயர்ந் துள்ளது. அதே போல் முல்லை பூ ரூ.1600 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் இன்று (அக்.19) மல்லிகை பூ விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
01-Oct-2025