எஸ்.பி.பட்டினத்தில் நாளை வேலை வழிகாட்டும் நிகழ்ச்சி
தொண்டி; தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் நாளை எஸ்.பி.பட்டினம் முன்னாள் மாணவர்கள் சேவை மன்றம், ராமநாதபுரம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு வேலையில் முன்னுரிமை தகவல்கள், வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இது குறித்து ராமநாதபுரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்கள் கூறியதாவது:இந்நிகழ்ச்சி எஸ்.பி. பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (மே 13) காலை 10:30 முதல் 12:30 மணி வரை நடைபெறும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை பெறுவதற்கான வழிகாட்டல், தனியார் துறை வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் உயர்கல்வி படித்த இளைஞர்கள், பெற்றோர் கலந்து கொள்ளலாம் என்றனர்.