இணை இயக்குநர் பொறுப்பேற்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக பணிபுரிந்த கண்ணையா பதவி உயர்வில் கூடுதல் இயக்குநரானார். இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் கூடுதல் பொறுப்பில் இணை இயக்குநராக பணிபுரிந்தார்.ராமநாதபுரம் வேளாண் வணிக பிரிவு துணை இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் பதவி உயர்வு பெற்று வேளாண் இணை இயக்குநராக பொறுபேற்றுள்ளார். அவருக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.