மேலும் செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா
20-Dec-2025
ராமநாதபுரம்: கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதி முருகன் கோயில்களில் அபிேஷகம், பூஜை, வழிபாடு, அன்னதானம் நடந்தது. மார்கழி மாதம் கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. இதே போன்று ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம்சுவாமி, பாலதண்டயுதபாணி சுவாமி கோயில், முத்தலாம்மன் கோயில் முருகர் சன்னதிமற்றும் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. *கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் திருச்செந்தில் முருகன் கோயிலில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேல் வழிபடப்படுகிறது. கார்த்திகை பூஜையை முன்னிட்டு வேல் வடிவில் உள்ள மூலவர் திருச்செந்தில் முருகனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை நாகராஜன் பட்டர் செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத் தலைவர் விஜயகுமார் மற்றும் மனுமயா இளைஞர் கொல் தச்சு தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
20-Dec-2025