மேலும் செய்திகள்
தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
07-Sep-2024
கிழக்கு மங்களேஸ்வரி நகரில் முளைப்பாரி விழா
19-Sep-2024
கீழக்கரை: கீழக்கரை ஹிந்து பஜாரில் உள்ள அரியசுவாமி கோயிலில் 58-வது ஆண்டு உற்ஸவ விழா மற்றும் சமயபுரம் மாரியம்மன் முளைக்கொட்டு விழா நடந்தது.மூலவர்கள் வலம்புரி விநாயகர் , அரிய சுவாமி, வீரமாகாளி, முத்து இருளாயி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.தட்டான் தோப்பு தெரு நாராயணசாமி கோயிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம், அழகு குத்தி நேர்த்திக்கடன் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். முளைப்பாரி ஊர்வலம் நகரில் வலம் வந்தது. இரவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாலையில் நடந்த முளைப்பாரி ஊர்வலத்தில் அம்மன் கரகம் முன்னே செல்ல பெண்கள் ஊர்வலமாக சென்று 21 குச்சு கடற்கரையில் பாரியை கரைத்தனர். ஏற்பாடுகளை கீழக்கரை வாணிய செட்டியார் உறவின்முறை தலைவர் கோட்டைச்சாமி, பொருளாளர் ஜெயராமன், விழாக் குழு தலைவர் கார்த்திகேயன், பூஜாரி ராமதாஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
07-Sep-2024
19-Sep-2024