உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்

பத்து நிமிடங்களில் முடிந்த கீழக்கரை நகராட்சி கூட்டம்

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குள் கூட்டம் நிறைவடைந்தது.கீழக்கரையில் நடக்கவுள்ள நகராட்சி கூட்டம் குறித்து அங்குள்ள செய்தியாளர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாமல் ரகசியமாக நடத்தி முடிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறியதாவது:கீழக்கரை நகராட்சியில் நிலவும் அத்தியாவசிய பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக வரி விதிப்பு அதிகரிப்பு, நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தொடர் பாதிப்பை சந்திக்கின்றனர்.தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. முறையாக ரோட்டை சீரமைக்காததால் உள்ள அவல நிலை உள்ளிட்டவைகள் குறித்து கீழக்கரை நகராட்சியில் தெரிவித்து அதற்கான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 1 முதல் 21 வார்டுகளிலும் உள்ள பொதுவான பிரச்னைகளுக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்து அப்பகுதி மக்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்த வேண்டும்.கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ரகசியமாக நடத்தப்பட்ட நகராட்சி கூட்டம் குறித்து நகரில் சமூக வலைதளங்கள் மூலமாக பேசப்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை