உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தெருவிளக்கு எரியாததால் இருளில் முழ்கும் கொண்டுலாவி கிராமம்

தெருவிளக்கு எரியாததால் இருளில் முழ்கும் கொண்டுலாவி கிராமம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கொண்டுலாவி கிராமத்தில் தெருவிளக்கு எரியாதால் இருளில் மூழ்கியது.கொண்டுலாவி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக முறையாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் கொண்டுலாவி கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வீட்டில் மின்விளக்கை அணைக்காமல் உள்ளனர். எனவே கொண்டுலாவி கிராமத்தில் தெருவிளக்கு ஏரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி