மேலும் செய்திகள்
ஆடிப்பெருக்கு எதிரொலி பூக்கள் விலை உயர்வு
03-Aug-2025
ராமநாதபுரம்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ராமநாத புரத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000க்கு விற்பனையானது. தமிழகம் முழுவதும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் பக்தர்கள் கிருஷ்ணரை வழிபட்டு அவரது பிறப்பை நினைவுகூர் கிறார்கள். இதனால் நேற்று காலை முதல் வழக்கத்தை விட பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மண்டபம், மதுரையில் இருந்து அதிகளவில் மல்லிகை பூக்கள் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக கிலோ மல்லிகை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படும். பண்டிகை காலங்களில் ரூ.800 வரை விற்கப்படும். நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழக்கத்தை விட பூக் களின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1000-க்கு விற்பனையானது. முல்லை பூ ரூ.600க்கும், ரோஜா ரூ.300க்கும், செண்டுபூ ரூ.150க்கும் விற்பனை யானது.
03-Aug-2025