உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கண்ணபுரத்தில் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

கண்ணபுரத்தில் மகாகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் கண்ணபுரத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட மகாகணபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:30 மணிக்கு அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. மகா கணபதி, ராகு, கேது கோயில் சன்னதியின் கோபுர விமான கலசத்தில் சாஸ்திரிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் கோகிலா, முதல்வர் பிரீத்தா, துணை முதல்வர் முத்துக்கண்ணு உள்ளிட்டோர் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !