உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தையில் வசதிகளில்லை; வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

வாரச்சந்தையில் வசதிகளில்லை; வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

திருவாடானை; திருவாடானை வாரச்சந்தையில் அடிப்படை வசதியில்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாரச்சந்தை உள்ளது. திங்கள் தோறும் சந்தை நடைபெறும். அதிகாலையில் ஆடுகளும் அதனை தொடர்ந்து காய்கறிகள், மீன் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படும். இச்சந்தை ஏலம் விடப்பட்டு வரி வசூல் செய்யப்படுகிறது.ஆனால் அடிப்படை வசதியில்லாததால் வியாபாரிகள், பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மீன்கடை மற்றும் வியாபாரிகள் தார்பாய் மூலம் கூரை அமைத்து விற்பனை செய்கின்றனர். காற்று பலமாக வீசினால் தார்பாய் பறந்து விடுகிறது. மேலும் கழிப்பறை வசதியில்லை. கடைகளுக்கு அருகே சீமைகருவேல மரங்கள் அடர்ந்துள்ள இடம் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. சந்தைக்கு என கட்டபட்ட கழிப்பறை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மழை பெய்தால் பொருட்களை பாதுகாக்க முடியாமல் வியாபாரிகள் தவிக்கின்றனர்.போதுமான இடம் இருந்தும் விரிவுபடுத்தாததால் நிறைய கடைகாரர்கள் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கடைகளை அமைத்துள்ளனர். சந்தையில் அடிப்படை வசதி செய்து கூரை அமைத்துக் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி