உள்ளூர் செய்திகள்

 விளக்கு பூஜை

கமுதி: கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் சுடலை மாடசாமி, மாரியம்மன் கோயில் மாசிகளரி மகா சிவராத்திரி பாரிவேட்டை விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். இதனை முன்னிட்டு சுடலை மாடசாமி, மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 508 விளக்கு பூஜை நடந்தது. விழாவில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்ரிய நாடார் உறவின் முறையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி