ராமேஸ்வரத்தில் விளக்கு பூஜை
ராமேஸ்வரம்:உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. கோயில் 3ம் பிரகாரத்தில் பெண்கள் திருவிளக்கில் தீபம் ஏற்றி பூ அர்ச்சனை செய்து பூஜை செய்தனர். இதில் ராமேஸ்வரம், பாம்பன், ராமநாதபுரம், உச்சிப்புளி, திருப்புல்லாணி ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பசுமை ராமேஸ்வரம் நிர்வாகி சரஸ்வதியம்மா செய்திருந்தார்.