உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயிலில் விளக்கு பூஜை

கோயிலில் விளக்கு பூஜை

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களேஸ்வரி நகரில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மன், விநாயகர், கருப்பண்ண சுவாமி, மகாலட்சுமி, துர்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் நுாறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்தரையர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை