மேலும் செய்திகள்
சேதமடைந்த மின்கம்பம்
21-Sep-2024
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே சாத்தனுாரில் விவசாய நிலத்தில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே சாத்தனுார் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், மிளகாய், பருத்தி உட்பட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கின்றனர். கிராமத்திற்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்துார் துணை மின்நிலையத்திலிருந்து மின்கம்பங்கள் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது. கடந்த பல மாதங்களாகவே விவசாய நிலத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயி மல்லிகா கூறியதாவது:சாத்தனுார் கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்வதால் விவசாயம் செய்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பருவமழை காலம் துவங்குவதற்கு முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
21-Sep-2024