உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்,: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில், திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக, சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை யாசிரியர் பகவதிக்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் மங்களீஸ்வரன் முன்னிலை வகித்தார். திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆண்டனி ரிஷாந்தேவ் உத்தரவின் பேரில், பள்ளி மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், குற்ற சம்பவங்கள் குறித்தும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சட்ட உதவிகள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகா லட்சுமி, வட்ட சட்ட பணி குழு தன்னார்வலர் கோட்டைச்சாமி, ஆசிரியர்கள் சிலம்பரசன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ