குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள்
தொண்டி: தொண்டி பகுதியில் உள்ள குளங்களில் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்திருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டியிலிருந்து நம்புதாளை செல்லும் வழியில் கல்லுகுளம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளிக்கவும், கால்நடைகளுக்கு பயனாகவும் இருந்தது. சில ஆண்டுகளாக குளத்தில் தாமரை செடிகள் அதிகமாக படர்ந்துள்ளதால் பயன்படுத்த முடியாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: குளத்திற்கு அருகில் மற்றொரு குளம் உட்பட பல குளங்களில் ஆகாயத் தாமரை செடிகள் புதர்போல் அடர்ந்துள்ளது. கால்நடைகள் கூட குளத்திற்குள் இறங்க முடியாத வகையில் அடர்ந்துள்ளதால் பயனில்லாமல் உள்ளது. செடிகளை அகற்றி குளத்தை துார்வாரி சுத்தபடுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.