உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காதல் ரோஜாவே... இன்று லவ்வர்ஸ் டே எதிரொலி தேவை அதிகம்

காதல் ரோஜாவே... இன்று லவ்வர்ஸ் டே எதிரொலி தேவை அதிகம்

ராமநாதபுரம்: இன்று (பிப்.14) காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்கள் தேவை அதிகரித்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெங்களூரு, ஒசூரிலிருந்து குறைந்த அளவே ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் கடந்த வாரம் ரூ.20க்கு விற்ற ஒரு ரோஜாப் பூ மூன்று மடங்கு விலை அதிகரித்து ரூ.60க்கும், பவுச் ரூ.900 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம் பகுதியில் மல்லிப்பூக்கள் சாகுபடி செய்கின்றனர். இது போக பெரும்பாலான பூக்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வருவதால் பிற பகுதிகளை விட பூக்களின் விலை கூடுதலாக உள்ளது. இன்று ( பிப்.14 ல்) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலிப்பவர்கள், காதலித்து திருமணமானவர்கள் உட்பட பலர் இந்த நாளில் தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குகின்றனர். குறிப்பாக ரோஜா பூக்கள் அதிகளவில் காதலர் தினத்தன்று பரிசாக வழங்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரத்திற்கு பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து ரோஜாப் பூக்களை கொள்முதல் செய்து விற்கின்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் பூ வியாபாரி கே.முருகன் கூறியதாவது:காதலர் தினத்தை முன்னிட்டு பெங்களூரு, ஓசூர் மார்க்கெட்டில் ரோஜா பூக்களை கொள்முதல் செய்துள்ளோம். மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய வண்ணங்களில் உள்ளது. ஒரு பவுச்சில் 10 முதல் 14 பூக்கள் இருக்கும். கடந்த ஆண்டு பவுச் ரூ.300 வரை விற்றது. இந்த ஆண்டு ஓசூர் மார்க்கெட்டில் இருந்து வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு ரோஜாப்பூ அதிகளவில் செல்கிறது. தேவை அதிகரிப்பால் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. ரூ.20க்கு விற்ற இலையுடன் கூடிய ரோஜா தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரையும், பவுச் ரூ.500 முதல் ரூ.900 வரை விற்கிறோம். இப்பூக்கள் 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். முதலீடு அதிகரித்த போதும் விற்பனை மந்தமாக உள்ளது. பொதுவாக ரோஜாப் பூ உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ