தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்
திருவாடானை: திருவாடானை, பாரதிநகர், சின்னக்கீரமங்கலம் வழியாக நேற்று மதியம் 12:00 மணிக்கு ஹெலிகாப்டர் ஒன்று மிக தாழ்வாக பறந்து சென்றது. மிகக் குறைந்த உயரத்தில் கூரைக்கு மேல் பறப்பது போல் சத்தம் கேட்டதால் மக்கள், சிறுவர்கள் ஆர்வத்துடன் வீடுகளை விட்டு வெளியே வந்து வியப்புடன் பார்த்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து சென்றது மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பாக பேசப்பட்டது.