உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை நெல் விவசாயம் அறுவடை மகசூல் குறைவு: விவசாயிகள் கவலை

கோடை நெல் விவசாயம் அறுவடை மகசூல் குறைவு: விவசாயிகள் கவலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம், அதனை சுற்றியுள்ள இடங்களில் கோடை நெல் சாகுபடிக்கு அதிகளவில் செலவு செய்துள்ள நிலையில், போதிய மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் பாசன பகுதிகளான இருதயபுரம், பொட்டக்கோட்டை, புலிவீரன் தேவன் கோட்டை, பிச்சனார்கோட்டை, நோக்கன்கோட்டை, நெடும்புலிக் கோட்டை, பொன்னாலகோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கோடை நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடை நெல் விவசாயம் மகசூல் சூழ்நிலையை அடைந்துள்ளது. இவ்விடங்களில் விவசாயிகள் நெல் அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோடை நெல் சாகுபடி பராமரிப்பு பணிக்கு அதிகளவில் செலவு செய்துள்ள நிலையில், போதிய மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை