/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்
மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை வேண்டும் பேரூராட்சியில் தீர்மானம்
தொண்டி : மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்தி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது. துணைதலைவர் அழகுராணி, செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தொண்டி பகுதியில் வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளதால் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். கல்குளம் ஊருணி அருகில் கழிப்பறை அமைக்க வேண்டும். தொண்டியில் வர்த்தகம் நாளுக்கு நாள் பெருகி வருவதால் மக்கள் நலன் கருதி மதுரை- தொண்டி புதிய ரயில்பாதை அமைக்க அரசை வலியுறுத்துவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.