உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் டேங்கர் லாரிகளை சுகாதாரமாக பராமரியுங்கள்

குடிநீர் டேங்கர் லாரிகளை சுகாதாரமாக பராமரியுங்கள்

சாயல்குடி, : சாயல்குடி, கடலாடி, சிக்கல், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் லாரிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் டேங்கர்களை முறையாக சுத்தம் செய்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.கடலாடி மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் குறைவாக வருவதாலும், வரத்து இல்லாத பகுதிகளில் குடம் ரூ.7க்கு டேங்கர் லாரி குடிநிரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.குடிநீர் வசதியுள்ள கிராமங்களில் இருந்து டேங்கர்களில் சேகரிக்கப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிலையில் டேங்கர்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். தண்ணீர் விநியோகம் செய்யும் டேங்கர்களில் பாசி படிந்தும் இரும்பு துகள்கள் காணப்படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது:டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் குடத்தில் தண்ணீர் சேகரித்து சமையல் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்துகிறோம். குளோரினேஷன் செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்த வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் உரிய முறையில் டேங்கர்களை ஆய்வு செய்ய வேண்டும்.இதே போல் கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ