உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாலங்குடி மக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., பிளான்ட்

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மாலங்குடி மக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., பிளான்ட்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட மாலங்குடி கிராமத்தில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.இங்கு பொதுமக்களின்அடிப்படை தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். இது குறித்து பலமுறை கலெக்டருக்குமனு கொடுத்தும் ஊராட்சியில் உரிய நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட மாலங்குடி, வடவாலங்குளம், தெற்கு மல்லல், கோவிலாஞ்சாத்தான், மூஞ்சாண், கலக்குடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முறையான குடிநீர் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காவிரி குடிநீர் கானல் நீராக உள்ளதால் குடம் குடிநீர் ரூ.12 விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மாலங்குடி விவசாயி கனகவிஜயன் கூறியதாவது:மாலங்குடி கிராமத்தில்குடிநீர் வசதி முறையாக இல்லை. ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படாமல் பெயரளவிற்கு உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்துள்ளது. கிராமத்தில் உள்ள மயானத்திற்கு தகன மேடை இல்லாததால் திறந்தவெளியில் உடலை தகனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுற்றுச்சுவர் இல்லை.மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். ஊராட்சியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.மாலங்குடி, மல்லல் பகுதியில் அமைக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான ஆர்.ஓ., பிளான்ட் எவ்வித பயன்பாடும் இன்றி காட்சி பொருளாகஉள்ளதால் மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி மற்றும் தனி அலுவலர்கள்குறைகளை நிவர்த்தி செய்ய உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ