மேலும் செய்திகள்
வாய்க்காலில்ஆண் உடல் மீட்பு
06-Mar-2025
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கரை ஒதுங்கியது.தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் 60 வயதுள்ள ஆண் உடல் கரை ஒதுங்கியது. இவர் வெள்ளை நிற சட்டை, பனியன், கோடு போட்ட அரைக்கால் சட்டை அணிந்துள்ளார். இவர் யார் என தெரியவில்லை. தனுஷ்கோடி மரைன் போலீசார் உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.குடும்ப தகராறினால் முதியவர் தனுஷ்கோடி கடலில் மூழ்கி தற்கொலை செய்தாரா அல்லது ஆபத்தை உணராமல் தனுஷ்கோடி கடலில் குளித்த போது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Mar-2025